உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கெம்பேகவுடா பேனருக்கு தீ வைப்பால் போராட்டம்

 கெம்பேகவுடா பேனருக்கு தீ வைப்பால் போராட்டம்

ராம்நகர்: கெம்பேகவுடா பேனருக்கு தீ வைத்தவர்களை கைது செய்ய கோரி, கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராம்நகரின் சென்னப்பட்டணா தாலுகா தேவரஹள்ளி கிராமத்தில், கெம்பேகவுடா ஜெயந்தியை முன்னிட்டு அவரது உருவப்படம் பொறித்த பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு கெம்பேகவுடாவின் ஒரு பேனர் மீது மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் பேனர் எரிந்து கருகியது. நேற்று காலையில், பேனருக்கு தீ வைக்கப்பட்டதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீ வைத்தவர்களை கைது செய்ய கோரி, பேனர் அருகில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.கே.தொட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ