உள்ளூர் செய்திகள்

 புல் அவுட்

ஏன் மாற்றணும்? எடியூரப்பா இல்லாவிட்டால், பா.ஜ., இல்லை. தேவகவுடா இல்லாவிட்டால் ம.ஜ.த., இல்லை. அதே போன்று முதல்வர் சித்தராமையா இல்லாவிட்டால், காங்கிரஸ் இல்லை. காங்கிரசுக்கு சித்தராமையா கட்டாயம். முதல்வர் நாற்காலி காலியில்லை. அவரை எதற்காக மாற்ற வேண்டும்? ஆட்சிக் காலம் முழுவதும், அவரே முதல்வராக இருக்க வேண்டும். - ராஜண்ணா, காங்., முன்னாள் அமைச்சர் காங்., மேலிடம் அச்சம் சிவகுமாரை பார்த்தால் பாவமாக இருக்கிறது. மிகவும் விரக்தியில் இருக்கிறார். முதல்வராக தயாராக இருந்தார். பீஹார் தேர்தலுக்கு பெருமளவில் பணம் கொடுத்தார். ஆனால் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இத்தேர்தல் முடிவு வெளியான பின், முதல்வர் சித்தராமையாவிடம், காங்கிரஸ் மேலிடம் சரண்டர் ஆகிவிட்டது. மாநிலத்தில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டால், கர்நாடகாவை இழந்துவிட நேரிடுமோ என, காங்., மேலிடம் அஞ்சுகிறது. - பசனகவுடா பாட்டீல் எத்னால், எம்.எல்.ஏ., உரிமை கோருவோம் மாநில காங்கிரஸ் அரசு கவிழ்ந்தால், ஆட்சியில் அமர நாங்கள் முயற்சிப்போம். மாநில கட்சியான ம.ஜ.த., வலுவாக உள்ளது. அரசு மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது. எங்கள் கட்சிக்கு தொண்டர்கள் பலம் உள்ளது. அடுத்த தேர்தலிலும், ம.ஜ.த., சார்பில் நான் போட்டியிடுவேன். வாக்குறுதி திட்டங்களுக்கு மிக அதிகமான பணத்தை அரசு செலவிடுகிறது. சாலைப் பள்ளங்களை மூட முடியவில்லை. - ஏ.மஞ்சு, எம்.எல்.ஏ., - ம.ஜ.த.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்