மேலும் செய்திகள்
ஆஸ்திக சமாஜத்தின் நாம சங்கீர்த்தன வைபவம்
22-Jul-2025
சிக்க பானஸ்வாடி: ஆஸ்திகா சமாஜ் கல்யாண் நகர் சார்பில் வரும் 26, 27ம் தேதிகளில், பானஸ்வாடி பிரதான சாலை, சுப்பையன பாளையாவில் உள்ள சீதா ராமா கல்யாண மண்டபத்தில் ராதா திருக்கல்யாணம் நடக்கிறது. வரும் 26ல் காலையில் தோடயமங்கலம், குரு தியானம், அஷ்டபதி -- கீதா கோவிந்தம்; மாலையில் பஞ்சபடி, தியானம், பூஜைகள், திவ்ய நாமம். காலையிலும், மாலையிலும் பக்தர் களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது. மறுநாள் 27ல் அதிகாலையில் மஹா கணபதி ஹோமம், உஞ்சவிருத்தி, திவ்யநாமம், ஸ்ரீராதா மாதவா கல்யாண உத்சவம் பஜனை வடிவில் நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலையில் வசந்த கேளிக்கை, பவலிம்பு - சயன உத்சவம், ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 98459 74698, 94480 57744, 97397 94193 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
22-Jul-2025