உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராய்ச்சூர் - தேவதுர்கா சுங்கச்சாவடி மூட ம.ஜ.த., - எம்.எல்.ஏ., இரவில் தர்ணா

ராய்ச்சூர் - தேவதுர்கா சுங்கச்சாவடி மூட ம.ஜ.த., - எம்.எல்.ஏ., இரவில் தர்ணா

ராய்ச்சூர்: ராய்ச்சூர் - தேவதுர்கா சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றாததை கண்டித்து, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., காரேம்மா நாயக், அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தர்ணாவில் ஈடுபட்டனர்.ராய்ச்சூரில் அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் தலைமையில் இம்மாதம் 18ம் தேதி, மாவட்ட மேம்பாட்டு ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, ராய்ச்சூர் - தேவதுர்கா சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்றும்படி, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., காரேம்மா நாயக், தர்ணா செய்தார்.அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் எவ்வளவோ கூறியும், காரேம்மா நாயக் கேட்கவில்லை. இதையடுத்து, சுங்கச்சாவடியை 'தற்காலிகமாக' மூடும்படி மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.ஆனாலும் சுங்கச்சாவடி மூடப்படவில்லை. இதையறிந்த எம்.எல்.ஏ., காரேம்மா நாயக், தன் ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் இரவே அங்கு சென்று, சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் செலுத்தும் பகுதியில் அமர்ந்து கொண்டார்.இரவு முதல் அதிகாலை முதல் அங்கேயே உறங்கினர். இரவு பொழுதுபோகும் வகையில், அவரது ஆதரவாளர்கள் பாடல் பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி