உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆண்களை விமர்சித்து ரம்யா சர்ச்சை பதிவு 

 ஆண்களை விமர்சித்து ரம்யா சர்ச்சை பதிவு 

- நமது நிருபர் -: 'ஒரு ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான், எப்போது கொலை செய்வான் என்று யாருக்கும் தெரியாது' என, நடிகை ரம்யா சர்ச்சை பதிவு வெளியிட்டு உள்ளார். தெருநாய்களால் ஏற்படும் பிரச்னை குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, அஞ்சாரியா அமர்வு விசாரிக்கிறது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், 'தெருநாய்கள், சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை கடிக்க வாய்ப்பு உள்ளது. தெ ருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தெருநாய் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளது என்று யாருக்கு தெரியும்' என்றனர். இதுகுறித்து நடிகை ரம்யா இன்ஸ்டாகிரா மில் பதிவில், 'ஆண்கள் மனதை புரிந்து கொள்ள முடியாது. ஒரு ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை செய்வான், எப்போது கொலை செய்வான் என்று யாருக்கும் தெரியாது. 'எனவே அனைத்து ஆண்களையும் சிறையில் அடைக்க முடியுமா' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு, எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ