உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ராணுவ நடவடிக்கை ரவிசங்கர் குருஜி கருத்து

ராணுவ நடவடிக்கை ரவிசங்கர் குருஜி கருத்து

மங்களூரு: தட்சிணகன்னடா மங்களூரில், நேற்று 'ஆர்ட் ஆப் லிவிங்' அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி அளித்த பேட்டி:பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் புகலிடத்தை குறிவைத்து, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், தாக்குதல் நடத்தியது பாராட்டத்தக்கது.பயங்கரவாதம், மனித குலத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்தை வேருடன் வெட்டி சாய்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இந்தியா விவேகத்துடன் செயல்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது, சரியான நடவடிக்கையாகும்.உள்நாடு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் நன்மையாகவே நடக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு சரியான பாதையில் செல்கிறது. எனவே மக்கள் பயப்படவோ அல்லது ஆலோசிக்கவோ தேவையில்லை.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி