உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

பெங்களூரு: 'லோ க் ஆயுக்தாவிற்கு வந்த புகார்களை அனுப்பி, அரசு அதிகாரிகளை மிரட்டி, ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி பணம் பறித்தது உண்மை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண் டும்' என, தலைமை செயலருக்கு, லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., பரிந்துரை செய்துள்ளார். கர்நாடகா அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், லோக் ஆயுக்தா முன்னாள் தலைமை ஏட்டு நிங்கப்பா சாவந்த், கடந்த ஜூன் 5ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது செல்போனை ஆய்வு செய்தபோது, அப்போதைய லோக் ஆயுக்தா எஸ்.பி.,யான ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷியுடன் பேசியதும், 'வாட்ஸாப்'பில் குறுந்தகவல் அனுப்பியதும் தெரிந்தது. அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டில், ஸ்ரீநாத் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். கைதில் இருந்து தப்பிக்க முன்ஜாமினும் பெற்றார். விசாரணைக்கு ஆஜரான ஸ்ரீநாத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 செல்போன்களில், 2 செல் போன்கள் சைபர் கிரைம் ஆய்வகத்திற்கும், ஒன்று குஜ ராத்தில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட் டன. அழிக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையில் அதிகாரிகளை மிரட்டி ஸ்ரீநாத் பணம் பறித்தது தொடர்பாக, லோக் ஆயுக்தாவும் விசாரித்தது. இதுதொடர்பாக தலைமை செயலர் ஷாலினிக்கு லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதே வ் ஜோஷிக்கு எதிராக முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் மிகவும் தீவிரமானவை. அவர் இந்திய சிவில் சர்வீசஸ் விதிகளை மீறியது தெளிவாகி உள்ளது. அதிகாரிகளை மிரட்டி பறி த்த பணத்தை, கிரிப் டோ கரன்சியில் ஸ்ரீநாத்தும், நிங்கப்பாவும் முதலீடு செய்துள்ளனர். மேலும் சாட்சிகள் சேகரிக்கப்பட வேண்டி உள்ளது. ஸ்ரீநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ