உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ‘தகுதியற்ற பயனாளர்களை நீக்க 20 கோடி ரூபாய் செலவு’

‘தகுதியற்ற பயனாளர்களை நீக்க 20 கோடி ரூபாய் செலவு’

பெங்களூரு: பெங்களூரிலுள்ள கிரஹலட்சுமி திட்டத்தின் தகுதியற்ற பயனாளர்களை நீக்குவதற்கு 20 கோடி ரூபாய் செலவாகும் என ஜி.பி.ஏ., வாக்குறுதி திட்ட அமலாக்க குழுவின் தலைவர் கிருஷ்ணப்பா கூறி உள்ளார். இதுகுறித்து, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய உத்தரவாத திட்ட அமலாக்க குழுவின் தலைவர் கிருஷ்ணப்பா கூறியதாவது: காங்கிரஸ் அரசின் ஐந்து உத்தரவாத திட்டங்களை, பெங்களூரில் செயல்படுத்துவதற்கு இதுவரை, 20,362 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. பெங்களூரில் மட்டும் இறந்துபோன 18,522 பேரின் வங்கிக்கணக்குகளுக்கு கிரஹலட்சுமி பணம் 7.18 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இதனால், மாநில அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு மறுசரிபார்ப்பு பணி நடத்தப்பட வேண்டும். பெங்களூரில் உள்ள கிரஹலட்சுமி திட்டத்தின் தகுதியற்ற பயனாளர்களை கண்டறிய வீடு, வீடாக சரிபார்ப்பு பணிகள் நடக்கும். கைரேகை, முக அடையாளம் மூலம் சரிபார்ப்பு பணிகள் நடக்கும். இப்பணிகளுக்கு 20 கோடி ரூபாய் செலவாகும். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். சரிபார்ப்பு பணிகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை