| ADDED : ஜூன் 17, 2026 01:54 AM
மைசூரு: ''ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் இருப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல. மாறாக, வெறும் ஹிந்துத்துவா வாதிகளே,'' என, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல. மாறாக, அவர்கள் வெறும் ஹிந்துத்துவா கொள்கை ஆதரவாளர்களே. மதத்தின் பெயரால் எதையும் செய்ய முடியாது. ஆர்.எஸ்.எஸ்.,ஐ வெறும் கலாசார அமைப்பாக மட்டும் கருத முடியாது. இது, பா.ஜ.,வுக்காக செயல்படும் அரசியல் அமைப்பாகும். ஒவ்வொரு தேர்தலிலும் பா.ஜ.,வுக்கு உதவி செய்கிறது. இந்த அமைப்பின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன. அனைத்து பணப் பரிதவர்த்தனைகளுக்கு முறையான கணக்கு காட்டப்பட வேண்டும். எந்தவொரு அமைப்பும் ஹிந்துத்துவா என்ற நிழலில் ஒளிந்துகொண்டு சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் பிரயங்க் கார்கே கூறியது சரியே. இவ்வாறு அவர் பேசினார்.