ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டடங்களுக்கு தடை? தலைமை செயலருக்கு உத்தரவு
பாகல்கோட்: ''தமிழகம் போன்று, கர்நாடகாவிலும் அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து, மாநில தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, கர்நாடக காங்., அரசின் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஆர்.எஸ்.எஸ்., தன் நடவடிக்கைகளுக்காக அரசு கட்டடங்களை பயன்படுத்திக் கொள்கிறது. தமிழகம் போன்று, அரசு கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக, மாநில தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திகெரே ஜே.பி., பூங்காவில் நடந்த பெங்களூரு நடைப்பயிற்சி நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. மேடைக்கு வந்த அவர், தன் கருத்தை தெரிவித்திருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனக்கு பில்லி சூனியத்தில் நம்பிக்கை இல்லை. அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும்போது, வால்மீகி சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.