உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தனியாக உள்ள முதியோர் பெண்களுக்கு பாதுகாப்பு

 தனியாக உள்ள முதியோர் பெண்களுக்கு பாதுகாப்பு

காமசமுத்ரா: தனியாக உள்ள முதியோர், பெண்களுக்கு போலீசார் தைரியம் அளித்தனர். தனியாக உள்ள முதியோர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, மாநில போலீஸ் துறை செயல்படுத்திய, 'அசாரே' என்ற திட்டம் உள்ளது. இத்திட்டம், தங்கவயல் போலீஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட, காமசமுத்ரா போலீஸ் நிலைய எல்லைக்குள் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு போலீசார் சென்றனர். அங்கு தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம் நலம் விசாரித்தனர். போலீஸ் துறை உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தனர். முதியோர் உடல்நிலை, அவசர காலத்தில் அவர்களுக்கு உதவி, அவர்களது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்தனர். அந்நியர்களை தங்கள் வீடுகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; இணைய வழி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்களை பார்த்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். காமசமுத்ரா போலீஸ் நிலைய தொடர்புக்கு- 08005 55111, அவசர அழைப்புக்கு 112, பெண்கள் ஹெல்ப் லைன் -1091, சைபர் கிரைம் -1930 ஆகியவற்றுக்கு தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை