உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாநில டி.ஜி.பி.,யாக சலீம் நியமனம்

மாநில டி.ஜி.பி.,யாக சலீம் நியமனம்

பெங்களூரு:கர்நாடக மாநில புதிய டி.ஜி.பி., யாக சலீமை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநில டி.ஜி.பி.,யாக இருந்த அலோக் மோகன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அப்பதவிக்கு, சி.ஐ.டி., - டி.ஜி.பி.,யாக இருந்த சலீமை, தற்காலிக டி.ஜி.பி.,யாக மாநில அரசு நியமித்தது. இந்த நியமனத்தை எதிர்த்து, வக்கீல் சுதா கட்வா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சுதா வட்கா சார்பில் வாதிட்ட வக்கீல், 'மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கும் முன்பு, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் கமிட்டி, மாநில அரசு அனுப்பும் சிபாரிசு பட்டியலில், மூன்று பேரை சிபாரிசு செய்யும். இந்த சிபாரிசு கடிதம், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும். ஆனால், சலீம் விஷயத்தில், மாநில அரசு அவசர அவசரமாக அவரை தற்காலிக டி.ஜி.பி.,யாக நியமித்து, விதிகளை மீறி உள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல், 'மாநில டி.ஜி.பி., பதவிக்கான பெயர்களை, யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 26ம் தேதி கமிட்டியினர் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் பரிந்துரைக்கும் பெயர்களில், அரசு நியமனம் செய்யும்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நேற்று முதல் மாநில டி.ஜி.பி.,யாக சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ள சலீம், இதற்கு முன்பு பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராகவும், மாநில புலனாய்வு அமைப்பு அதிகாரியாகவும், சி.ஐ.டி., - டி.ஜி.பி.,யாகவும், மாநில ரயில்வே டி.ஜி.பி.,யாகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். பெங்களூரு போக்குவரத்து போலீஸ் கமிஷனராக இருந்தபோது, போக்குவரத்து நெரிசலை குறைக்க, புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததால், பலராலும் பாராட்டப்பட்டார். தற்போது மாநில டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ள இவர், அடுத்தாண்டு ஜூனில் ஓய்வு பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ