சரோஜா தேவி, கஸ்துாரி ரங்கனுக்கு சட்டசபை, மேல்சபையில் புகழாரம்
பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் உட்பட மறைந்த பிரபலங்களுக்கு, கர்நாடக சட்டசபை, மேலவையில், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, புகழாரம் சூட்டினர். கர்நாடகாவில் கடைசியாக கடந்த மார்ச்சில் பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அதன் பின், மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. சட்டசபை துவங்கியதும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து, சபாநாயகர் காதர், இந்திய அரசியலமைப்பு முகப்பு உரையை வாசித்தார். இதை மற்ற உறுப்பினர்களும் வாசித்தனர். போப் ஆண்டவர் அதன் பின், மேலவை முன்னாள் தலைவர் திப்பண்ணா, முன்னாள் துணை தலைவர் டேவிட் சிமயோன், முன்னாள் அமைச்சர் பேகானே ராமையா, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜண்ணா, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன், பிரபல விவசாய விஞ்ஞானி சுப்பண்ணா அய்யப்பன், மூத்த அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன். மூத்த எழுத்தாளர் சித்தலிங்கையா, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆகியோரின் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் காதர் தாக்கல் செய்தார். பெங்களூரில் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் ஆர்.சி.பி., வெற்றி கொண்டாட்டத்தின்போது இறந்தவர்கள் மற்றும் குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பலியானோருக்கும் சட்டசபை, மேலவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி சட்டசபையில் தலைவர்கள் பேசியதாவது: முதல்வர் சித்தராமையா: டாக்டர் கஸ்துாரி ரங்கன், கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்தவர். பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., முனைவர் பட்டம் படித்தவர். இஸ்ரோ தலைவராக, பல்வேறு சாதனைகளை புரிந்தவர். அவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கின. ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தவர். பத்ம விபூஷன் விருது பெற்றவர். தன் 1 7வது வயதிலேயே திரைத்துறையில் நுழைந்தவர் சரோஜா தேவி. கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழி களில் நடித்து கொடிகட்டி பறந்தவர். அவரது காலத்தி ல் பிரபல நடிகர்களாக இருந்த ராஜ்குமார், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., நாகேஸ்வர ராவ், சிவாஜி, ஜெமினி கணேசன், திலீப் குமார் உட்பட பல நடிகர்களுடன் நடித்தவர். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர். 60வது சுதந்திர தின விழாவையொட்டி, அவருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்தி ய அரசு வழங்கியது. எதிர்க்கட்சி தலைவர் அசோக்: சரோஜா தேவியின் வீடு அமைந்துள்ள மல்லேஸ்வரத்தின் 11வது தெருவுக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும். திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு, சரோஜா தேவி பெயரில் திரைப்பட விருது வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். மவுன அஞ்சலி இதுபோன்று, மேலவையில், தலைவர் பசவராஜ் ஹொரட்டி, அவை முன்னவர் போசராஜ் உட்பட அனைத்து கட்சி பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து பேசினர். இறுதியில் சட்டசபை, மேல்சபைகளில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.