உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஞ்., தேர்தலுக்கு கூட தகுதியற்றவர் சவதி ரமேஷ் ஜார்கிஹோளி கோபம் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி கோபம்

பஞ்., தேர்தலுக்கு கூட தகுதியற்றவர் சவதி ரமேஷ் ஜார்கிஹோளி கோபம் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி கோபம்

பெலகாவி: ''பஞ்சாயத்து தேர்தலில் நிற்க கூட தகுதியற்றவர் லட்சுமண் சவதி. அவரை யார் துணை முதல்வராக்கியது என்று தெரியவில்லை,'' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார். பெலகாவி மாவட்டம், சிக்கோடியில் நேற்று பா.ஜ., தொண்டர்கள் கூட்டம் நடந்தது. அப்போது எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி பேசியதாவது: பெலகாவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கு பின், அதானிக்கு வந்துள்ளேன். இம்முறை, டி.சி.சி., வங்கி தேர்தலில் மகேஷ் குமட்டஹள்ளி, எங்கள் தரப்பு வேட்பாளராக போட்டியிடுவார். காகவாட் தொகுதியில் லட்சுமண் சவதி ஆதரவு வேட்பாளரை எதிர்த்து ஸ்ரீமந்த் பாட்டில் போட்டியிடுவார். காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, ஒரு நாடக ஆசிரியர். 2018ல் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அவரை, அதானி மக்கள், தோற்கடித்தனர். ஆனால், அவரை கட்சி துணை முதல்வராக்கியது. இதுகுறித்து அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பாவிடம் கேட்டேன். அதற்கு அவர், இது கட்சி தலைமை எடுத்த முடிவு என்றார். லட்சுமண் சவதி, பஞ்சாயத்து தேர்தலில் கூட நிற்க தகுதியற்றவர். டி.சி.சி., வங்கி தலைவராக லிங்காயத்தை சேர்ந்தவர் தலைவராக வருவார். இது தொடர்பாக, கன்னிரா மடத்தில் லிங்காயத் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும். ஜார்கிஹோளி குடும்பம், லிங்காயத்திற்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசில் சேரும்படி, அக்கட்சி தலைமையிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் மறுத்துவிட்டேன். நான் காங்கிரசில் சேர்ந்திருந்தால், இன்று அமைச்சராகியிருப்பேன். ஆனால் லட்சுமண் சவதியோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டார். காங்கிரசுக்காக போட்டியிட்ட லட்சுமண் சவதியுடன் மேடையை பகிர்ந்து கொள்ளமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை