உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சொத்து ஆவணங்களை பாதுகாக்க மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு

சொத்து ஆவணங்களை பாதுகாக்க மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு

 பெங்களூரு மாநகராட்சி எல்லையில் உள்ள 20 லட்சம் தனியார் சொத்துகள், 6,819 மாநகராட்சி சொத்துகளின் ஆவணங்களை பாதுகாக்க, மாநகராட்சியில் தனி சர்வே பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்துகளை நல்ல முறையில் நிர்வகிக்கவும், ஆக்கிரமிப்பை தடுக்கவும் உதவியாக இருக்கும். மாநகராட்சி சொத்துகளில், 6,819 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 5,851 சொத்துகளுக்கு அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சொத்துகளுக்கும் அடையாள எண் வழங்கும் பணிகள் நடக்கின்றன. அடையாள எண் அளிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள், மாநகராட்சி இணைய தளத்தில் 'அப்லோட்' செய்யப்பட்டுள்ளன. மண்டல அளவில், மாநகராட்சிக்கு உரிமையான சொத்துகள் அடையாளம் காணப்படுகின்றன. ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில் 60 சதவீத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2025 - 26ம் ஆண்டில், அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி சொத்துகள் அடையாளம் காண திட்டம். மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி சொத்துகள் நிர்வகிப்பு விதிகள் - 2024க்கு, அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த விதிமுறை நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்தது. மாநகராட்சியில் ஒப்பந்தந்துக்கு அளிக்கப்பட்ட சொத்துகளின் ஒப்பந்த காலம் முடிந்துள்ளதால், புதிதாக ஏலம் விடவோ அல்லது ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளின்படி ஒப்பந்தம் அல்லது வாடகை தொகை நிர்ணயிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை