உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆபாச சைகை காட்டிய ஷாருக் மகனால் சர்ச்சை

 ஆபாச சைகை காட்டிய ஷாருக் மகனால் சர்ச்சை

பெங்களூரு: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்; திரைப்பட தயாரிப்பாளர். கடந்த 28ம் தேதி பெங்களூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின், அசோக்நகரில் உள்ள பப்பிற்கு சென்றார். பப்பின் பால்கனி மீது நின்று, ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது இரண்டு கைகளின் நடுவிரல்களை நீட்டி சிரித்தபடி ஆபாச சைகை செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள், பொது இடத்தில் ஆபாச சைகை செய்த ஆர்யன்கான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கருத்து பதிவிடுகின்றனர். ஆர்யன்கான் ஆபாச சைகை காட்டிய போது, அவரது அருகில் அமைச்சர் ஜமீர் அகமதுகான் மகன் சையத்கான், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன் முகமது நலபட் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ