| ADDED : செப் 08, 2026 07:59 PM
பெங்களூரு: சிவகுமார் முதல்வர் பதவியில் அமர்ந்து, நாளையுடன், 100 நாட்கள் நிறைவடைகின்றன. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். சிவகுமார் பல போராட்டங்கள், இடையூறுகளை கடந்து, முதல்வர் பதவியில் அமர்ந்தார். முதல்வர் பதவியில் அமர்ந்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில், சிவகுமார் பல முறை டில்லிக்கு சென்று வந்தார். மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்தார். இதற்கு பணிந்த காங்கிரஸ் மேலிடமும், சித்தராமையாவிடம் ராஜினாமா பெற்று, சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர்த்தியது. அவர் பதவிக்கு வந்து, நாளையுடன், 100 நாட்கள் நிறைவடைகின்றன. இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும்படி, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு, முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். சித்தராமையாவின் இல்லத்துக்கு நேற்று காலை சென்ற முதல்வர் சிவகுமார், அழைப்பிதழை கொடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். இருவரும் சிறிது நேரம், அரசியலை தவிர்த்து, நலம் விசாரித்து பேசி கொண்டனர். முதல்வருடன், அமைச்சர் பாலகிருஷ்ணா உட்பட, காங்கிரஸ் தலைவர்கள் பலர் சென்றிருந்தனர்.