உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காற்று மாசடைவதை தவிர்க்க தலைமை செயலருக்கு சிவகுமார் உத்தரவு

 காற்று மாசடைவதை தவிர்க்க தலைமை செயலருக்கு சிவகுமார் உத்தரவு

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.சி.யும், வாக்குறுதி திட்டங்கள் செயல்படுத்தும் ஆணைய துணைத்தலைவருமான தினேஷ் கூளிகவுடா, சில நாட்களுக்கு முன், துணை முதல்வர் சிவகுமாரிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். 'பெங்களூரில் ஒரு கோடியே 23 லட்சத்து 24,919 பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. இவற்றில் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். மக்கள் தொகை 1.47 கோடியாகும். மக்கள் தொகைக்கு நிகராக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நகரில் தினமும் சராசரியாக 2,563 புதிய வாகனங்கள் பதிவாகின்றன. தற்போது காற்றின் தரம் குறைந்துள்ளது. அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். காற்றின் தரம் குறைவதால், சிறார்கள், மூத்த குடிமக்களுக்கு மூச்சுத்திணறல், அலர்ஜி, ஆஸ்துமா, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், போக்குவரத்து வல்லுநர்கள், சுகாதார வல்லுநர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய வல்லுநர் கமிட்டியை விரைவில் அமைக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டில் பெங்களூரில் காற்றை சுத்தமாக்குவது, மாசு கட்டுப்படுத்துவது, வாகனங்கள் வெளியேற்றும் புகையை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை தீவிரப்படுத்துவது, வாகன போக்குவரத்து நெருக்கடியை நிர்வகிப்பது குறித்து ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட துணை முதல்வர் சிவகுமார், பெ ங்களூரில் காற்று மாசடைவதை கட்டுப்படுத்த, வல்லுநர் கமிட்டி அமைக்கும்படி அரசு தலைமை செயலருக்கு, நேற்று உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை