உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ‘உதான் 6.0 திட்ட டெண்டரில் ஷிவமொக்கா விமான நிலையம்’

‘உதான் 6.0 திட்ட டெண்டரில் ஷிவமொக்கா விமான நிலையம்’

ஷிவமொக்கா: ‘ ‘ஷிவமொக்கா விமான நிலையம் உதான் 6.0 டெண்டரில் சேர்ந்திருப்பது நல்ல தகவல்,’’ என பா.ஜ., – எம்.பி., ராகவேந்திரா தெரிவித்தார். ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி: டிச., 30, 31ம் தேதிகளில் நடக்கும் உதான் விமான சேவைக்கான வழித்தடங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. ‘உதான் 6.0’ திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம்’ என்று டெண்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டெண்டருக்கான கடைசி நாள் டிச., 8ம் தேதியாகும். டெண்டரை நிறைவு செய்து அதனை செயல்படுத்த பிப்ரவரி வரை ஆகலாம். இந்த டெண்டரில் ஷிவமொக்கா விமான நிலையம் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மாநில அரசின் வி.ஜி.எப்., எனும் சாத்தியக்கூறு இடைவெளி நிதி வழங்குவது குறித்து, மாநில அரசு சிந்திக்க வேண்டும். உதான் திட்டம் வரும் வரை, மாநில அரசு ஷிவமொக்கா – பெங்களூரு, ஷிவமொக்கா – ஹைதராபாத் ஆகிய ஒன்றிரண்டு வழித்தடங்களில் மூன்று மாதங்களுக்கு வி.ஜி.பி., திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !