உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புத்தர், பசவண்ணர் லட்சியங்களை பின்பற்றும் அரசு சித்தராமையா பேச்சு

புத்தர், பசவண்ணர் லட்சியங்களை பின்பற்றும் அரசு சித்தராமையா பேச்சு

மைசூரு : ''புத்தர், பசவண்ணர், காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் லட்சியங்களின்படி, காங்கிரஸ் அரசு செயல்படுகிறது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயில் நேற்று நடந்த அம்பேத்கர் ஜெயந்தி விழா மற்றும் மேம்பாட்டுப் பணிகளை துவக்கி வைத்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:மனிதர்களிடம் ஜாதி, மதத்தை காண்பவர்கள், விலங்குகளை நேசிக்கின்றனர். விலங்குகளை நேசிப்பது தவறில்ல; ஆனால் மனிதர்களை எதிர்ப்பது தவறு. அனைவரும் பொருளாதார ரீதியாக பலமானால், ஜாதி ஒழிந்துவிடும்.பசவண்ணர், புத்தர் ஜாதி ஒழிப்புக்காக போராடிய போதும், ஜாதி இன்னும் ஒழியவில்லை. பசவண்ணரை பின்பற்றுவோர், அவரின் வழிகாட்டுதலை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், சமூகத்தில் வாய்ப்பு கிடைக்கும்போது தான், சமூகம் முன்னேற்றம் அடையும். ஜாதி ஏற்றத்தாழ்வை வெறுத்த அம்பேத்கர், ஹிந்துவாக பிறந்த நான், ஹிந்துவாக இறக்க போவதில்லை என்று கூறி, புத்த மதத்துக்கு மாறினார்.உள் இடஒதுக்கீடு தொடர்பான குழப்பத்தை தீர்க்க நாகமோகன்தாஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைப்படி, தரவுகளை சேகரிக்க, கணக்கெடுப்பை துவங்கி உள்ளோம். உள் இடஒதுக்கீடு தொடர்பான அனைத்து குழப்பங்களையும் இந்த கணக்கெடுப்பு தீர்த்துவிடும்.அரசியல் அமைப்பில் அம்பேத்கர் இடஒதுக்கீட்டை வழங்கவில்லை என்றால், நான் முதல்வராகி இருக்க மாட்டேன்; ஆடு தான் மேய்த்துக் கொண்டிருப்பேன்.நம் நிலைமைக்கு கல்வியும், சமூக நிலையுமே காரணம் தவிர, விதியல்ல. வறுமை என்பது முந்தைய ஜென்மத்தில் செய்த பாவங்களால் ஏற்படுகிறது என்று கூறுவது கட்டுக்கதை.கர்மவினை கோட்பாட்டை நிராகரிக்கும்படி, பசவண்ணர் அழைப்பு விடுத்தார். புத்தர், பசவண்ணர், அம்பேத்கர், காந்தி ஆகியோரின் லட்சியங்களின்படி, காங்கிரஸ் அரசு செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஜங்கிள் லாட்ஜ் ரிசார்ட்ஸ் சார்பில், மக்கள் பயன்பாட்டுக்காக, புதிய சபாரி வாகனத்தின் சாவியை ஓட்டுநர்களிடம் கொடுத்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை