உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தர்மஸ்தலா வழக்கு சின்னையாவுக்கு ஜாமின்

 தர்மஸ்தலா வழக்கு சின்னையாவுக்கு ஜாமின்

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் கைதான சின்னையாவுக்கு, தட்சிண கன்னடா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த வழக்கில், சின்னையா என்பவரை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு, ஆகஸ்ட் 23ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பின், ஷிவமொக்கா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 20ம் தேதி பெல்தங்கடி நீதிமன்றத்தில், சின்னையா உட்பட 6 பேர் மீதும் 3,923 பக்க குற்றப்பத்திரிகையை, எஸ்.ஐ.டி., தாக்கல் செய்தது. இதற்கிடையில் ஜாமின் கேட்டு சின்னையா, தட்சிண கன்னடா மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி நேற்று உத்தரவிட்டார். 'எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் புகார் அளிக்கக் கூடாது; ஜாமினில் சென்ற பின் தலைமறைவு ஆகக் கூடாது; சாட்சிகளை மிரட்ட கூடாது; ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கக் கூடாது; விசாரணைக்கு சரியாக ஆஜராக வேண்டும்; விசாரணை முடியும் வரை மாவட்டத்தை விட்டு வெளியேற கூடாது; ஒரு லட்சம் ரூபாய் பிணைய தொகை செலுத்த வேண்டும்; 2 பேர் சாட்சி கையெழுத்து போட வேண்டும்' என்பது உட்பட 12 நிபந்தனைகளுடன், சின்னையாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி