உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாய குளத்தில் சகோதரியர் பலி

விவசாய குளத்தில் சகோதரியர் பலி

துமகூரு: மாடு மேய்க்க சென்ற இரண்டு சகோதரிகள், விவசாய குளத்தில் விழுந்து உயிரிழந்தனர். துமகூரு மாவட்டம், கொரட்டகரே தாலுகாவின் ஹர்ஷாபுரா கிராமத்தில் வசித்தவர் கங்கம்மா, 37. இவரது தங்கை சகுந்தலா, 36. இவர்கள் நேற்று காலையில் மாடு மேய்ப்பதற்காக, நிலத்துக்கு சென்றிருந்தனர். சகோதரிகளில் ஒருவர், நிலத்தில் இருந்த விவசாய குளத்தில் மாடுகளை தண்ணீர் குடிக்க வைத்த போது, கால் தவறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற மற்றொரு சகோதரியும், நீரில் இறங்கியதால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த கொரட்டகரே போலீசார், இருவரின் உடல்களை வெளியே எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி