காட்டி சுப்ரமண்யர் கோவிலில் சிவகுமார் தம்பதி தரிசனம்
தொட்டபல்லாபூர்,: தொட்டபல்லாபூரில் உள்ள, புராதன பிரசித்தி பெற்ற காட்டி சுப்ரமண்யர் கோவிலுக்கு, துணை முதல்வர் சிவகுமார், தன் மனைவியுடன் நேற்று காலை வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.பின் அவர் அளித்த பேட்டி:கோவில் சன்னிதியில், அரசியல் பேச விரும்பவில்லை. காட்டி சுப்ரமண்யர் கோவில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்த தலமாகும். நான் கஷ்டமான நாட்களை சந்தித்த போது, எனக்காக நண்பர்கள் காட்டி சுப்ரமண்யரிடம் பிரார்த்தனை செய்தனர். அதற்கு பலன் கிடைத்துள்ளது.நீண்ட நாட்களாகவே கோவிலுக்கு வந்து, சுப்ரமண்யரை தரிசிக்க வேண்டும் என, நினைத்தேன். ஆனால் பணிச்சுமையால் வர முடியவில்லை. இன்று (நேற்று) கோவிலுக்கு சென்றே ஆக வேண்டும் என, உறுதி பூண்டேன். பூஜைகளில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து பரிகார பூஜைகளில் பங்கேற்றேன். வரும் நாட்களில் இக்கோவில், மேலும் வளர்ச்சி அடையும். இந்த விஷயத்தில் ஹிந்து அற நிலையத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனியப்பா மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.