உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வாரிய தலைவர் பதவி நடைமுறை 10 நாளில் முடிக்க சிவகுமார் திட்டம்

வாரிய தலைவர் பதவி நடைமுறை 10 நாளில் முடிக்க சிவகுமார் திட்டம்

பெங்களூரு: வாரிய தலைவர் பதவிக்கான முழு நடைமுறையை 10 நாட்களில் முடிப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவிக்காக மூத்த எம்.எல்.ஏ.,க்கள், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைக்கும் மூத்த தொண்டர்கள், நிர்வாகிகள் இடையில் கடும் போட்டி எழுந்து உள்ளது.அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் தாண்டியும், காலியாக உள்ள வாரிய தலைவர் பதவியை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை என்று, சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மீது பதவி எதிர்பார்ப்போர் எரிச்சலில் உள்ளனர்.இந்நிலையில் பெங்களூரில் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:டில்லி சென்ற போது மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவை மட்டும் சந்தித்து பேசினேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு அந்தஸ்து வழங்குவது பற்றி விவாதம் நடந்தது. வாரிய தலைவர் பதவிக்கு, கட்சிக்காக பணியாற்றும் நபர்கள் பெயர்களை இறுதி செய்து உள்ளோம்.எம்.எல்.ஏ.,க்களிடம் ஒப்புதல் கேட்டு இருக்கிறோம். அமைச்சர்கள் கருத்துகளை கேட்க வேண்டி உள்ளது. இன்னும் 10 நாட்களில் முழு செயல்முறையும் முடித்து விடுவோம்.எனக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை என்று, சித்தராமையா கூறினாரா என்பது பற்றி எனக்கு தெரியாது. யார் என்ன கேட்டாலும், தலைமை மாற்றம் குறித்த பிரச்னைக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். கட்சி, அரசின் நலன்களை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்துவேன். கட்சி அமைப்பை வலுப்படுத்துவது எனது பொறுப்பு. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, சிவகுமாரை மாற்ற வேண்டும் என்று, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார். இதுபற்றி அவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை