உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்ற மகன் கைது

மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொன்ற மகன் கைது

விஜயநகரா: தாயை கொடுமைப்படுத்தியதுடன், தன் மனைவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். விஜயநகரா மாவட்டம், ஹகரிபொம்மனஹள்ளி தாலுகாவின், மாலவி கிராமத்தில் வசித்தவர் சிவலிங்கப்பா, 70. இவரது மனைவி கங்கம்மா, 65. தம்பதியின் மகன் சங்கரப்பா, 40. இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். சிவலிங்கப்பா, தன் மனைவியை தினமும் தகாத வார்த்தைகளால் திட்டுவார்; அடித்து கொடுமைப்படுத்துவார். இதை சங்கரப்பா பல முறை கண்டித்தும் பலன் இல்லை. இதற்கிடையே மருமகள் மீது, சிவலிங்கப்பா கண் வைத்திருந்தார். மருமகள் குளிக்கும்போது எட்டிப்பார்த்துள்ளார். பாலியல் தொல்லையும் கொடுத்தார். மகன் திருமணத்துக்காக சிவலிங்கப்பா கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை மகன் சங்கரப்பா திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால் கடன் பாக்கியுள்ளதாக கூறி சிவலிங்கப்பா தகராறு செய்தார். நேற்று முன் தினம் இரவு, தந்தைக்கும், மகனுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்து வீட்டை விட்டுச் செல்லும்படி மகனை சிவலிங்கப்பா விரட்டினார். அப்போது சங்கரப்பா, தந்தையை பிடித்துத் தள்ளினார். அங்கிருந்த உலக்கையால் தந்தை தலையில் அடித்தார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வழக்குப் பதிவு செய்த ஹகரிபொம்மனஹள்ளி போலீசார், சங்கரப்பாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ