மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற ஊழியர் சாலை விபத்தில் பலி
07-Jun-2026
சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து வாலிபர் பலி
14-Jun-2026
பெலகாவி: பைக்கில் செல்லும் போது, குறுக்கே வந்த நாயை காப்பாற்ற முயற்சித்த மகன், தாயை பறிகொடுத்தார். பெலகாவி நகரின் பந்தபாளகுந்த்ரி கிராமத்தில் வசித்தவர் சாந்தவ்வா கல்மடா, 60. இவர் நேற்று காலையில், தன் மகன் ஈரண்ணா கல்மடாவுடன், பைக் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். சாம்ப்ரா அருகில் செல்லும் போது, நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. நாய் மீது மோதி அபாயத்தை ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்தில், பிரேக் போட்டு பைக்கை நிறுத்த முற்பட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து, பைக்குடன் சேர்ந்து தாயும், மகனும் கீழே விழுந்தனர். தாயின் தலையில் பலத்த அடிபட்டது. ஈரண்ணா உடனடியாக தாயை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், வழியில் சாந்தவ்வா இறந்து விட்டதாக கூறினர். கண் முன்னே தாயை விபத்தில் இழந்த ஈரண்ணா, தாய் கடைசி நேரம் வரை, கையில் வைத்திருந்த பையை, ஈரண்ணா தன் மார்புடன் அணைத்தபடி கதறி அழுததை பார்த்து, அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர்.
07-Jun-2026
14-Jun-2026