உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ராஜகோபுரம் மேற்கூரை அமைக்க சிறப்பு பூஜை

 ராஜகோபுரம் மேற்கூரை அமைக்க சிறப்பு பூஜை

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் நுாற்றாண்டு பழமையான ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் அமைக்கப்பட்டு வரும் ராஜகோபுரத்தின் மேல் கூரையின் கற்கள் நிறுவும் பணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில், 10 கோடி ரூபாய் கருங்கற்களால் சிற்ப வேலைப்பாடுகளுடன், ராஜகோபுரம் கட்டும் பணிகள், எட்டு மாதங்களாக நடந்து வருகின்றன. இதில், ராஜகோபுரத்தின் மேல் கூரைக்கான கற்களை நிறுவும் பணிக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, வருவாய் துறை அதிகாரி மஞ்சுநாத், கருணாகரன், முகுந்தன், மோகன்ராஜ் உட்பட கோவில் திருப்பணிக்குழுவினர், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பூஜைக்கு பின், கிரேன் மூலம் கற்களை நிறுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ