உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பாண்டவர்கள் தங்கிய ஸ்ரீ பெட்டத பைரவேஸ்வரா கோவில்

பாண்டவர்கள் தங்கிய ஸ்ரீ பெட்டத பைரவேஸ்வரா கோவில்

ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புராவின் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெட்டத பைரவேஸ்வரா கோவில் அமைந்து உள்ளது. புராணங்களின்படி, இங்கு வசித்து வந்த சிவபெருமானின் தீவிர பக்தரான மாண்டவ்ய முனிவர் முன், லிங்க ரூபத்தில் சிவபெருமான் தோன்றினார். அன்று முதல், அவர் சிவனை வழிபட்டு வந்து உள்ளார். பாண்டவர்கள் வனவாசத்தின் போது, இக்கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. அன்று முதல் இக்கோவில் பெட்டத பைரவேஸ்வரா என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதன்பின் வந்த ஆட்சியாளர்களால் பல பரிணாமங்கள் பெற்றது. 600 ஆண்டுகளுக்கு முந்தைய இக்கோவிலின் சிற்பங்கள், கோபுரங்கள், துாண் மண்டபங்கள் திராவிட கட்டட கலையில் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமானை வழிபடுவோர், இக்கோவிலை உயிராக கருதுகின்றனர். மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரையும் ஈர்க்கும் கோவிலாக அமைந்து உள்ளது. கோவிலுக்கு இரு சக்கர வாகனம், கார்களில் செல்லலாம். மாலை 5:00 மணிக்குள் கோவிலுக்கு சென்று திரும்புவது அவசியம். அதன் பின், வனப்பகுதியில் விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இது தவிர, அடிவாரத்தில் இருந்து 500 படிக்கட்டுகள் வழியாகவும் மலையின் உச்சிக்கு சென்றடையலாம். - நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ