உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செப்., 6ல் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம்

செப்., 6ல் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம்

மைசூரு: ''மாவட்டத்தில் மாநில அளவிலான மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம், செப்., 6ம் தேதி நடக்கிறது. இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்,'' என, மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்து உள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், லட்சுமி காந்த் ரெட்டி பேசியதாவது: மாவட்டத்தில் மாநில அளவிலான வேலை வாய்ப்பு முகாம், செப்., 6ம் தேதி நடக்கிறது. இதில் வேலையில்லா இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் செயல்முறையை துவங்க வேண்டும். இதற்காக இணையதள முகவரி வழங்கப்படும். இம்முகாமில் 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் பட்டதாரிகள் மட்டுமின்றி, எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., முடித்தவர்களும் பங்கேற்கலாம். மாநில அரசின் 'யுவ நிதி' வாக்குறுதி திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை, இதில் பங்கேற்க வைக்க வேண்டும். இம்முகாம் வெற்றி பெற, குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை