திருடப்பட்ட தேக்கு மரங்கள் மீட்பு
தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்டத்துக்குட்பட்ட கேசம்பள்ளி அருகே நாககுப்பா என்ற கிராமத்தில் மனோகர் லால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 20 தேக்கு மரங்கள் வளர்ந்திருந்தன. இவற்றை 10ம் தேதி, மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக, உரிமையாளர் மனோகர் லால், கேசம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி, நாககுப்பா கிராமத்தின் பாபு, 42, சின்சாண்ட ஹள்ளி கிராமத்தின் நாராயணப்பா, 40, ஆகிய இருவரையும் கைது செய்தனர். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 தேக்கு மரங்களை போலீசார் மீட்டனர்.