உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன் கைது

மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன் கைது

சித்ரதுர்கா: கல்லுாரி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதால் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்கா ஹிரியூர் தாலுகா கோவர்ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் வர்ஷிதா, 19. இவர், சித்ரதுர்காவின் தேசிய நெடுஞ்சாலை - 48 ல் அமைந்துள்ள, அரசு பெண்கள் முதல்நிலை கல்லுாரியில், மாணவியர் தங்கும் விடுதியில் தங்கி பி.ஏ., படித்து வந்தார். கடந்த 14ம் தேதி, வீட்டிற்கு செல்வதாக விடுமுறை கடிதத்தை வார்டனிடம் கொடுத்து விட்டு, விடுதியில் இருந்து புறப்பட்டு சென்றார். அதிர்ச்சி இதற்கிடையில் தன் மகளை காணவில்லை என அவரது பெற்றோர் சித்ரதுர்கா கிராமப்புற போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். கடந்த திங்கட்கிழமை கோனுார் கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள வயல் பகுதியில், இளம் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் எஸ்.பி., தினகர் நேரில் வந்து பார்வையிட்டார். பிரேத பரிசோதனை செய்ய உடல் எடுத்து செல்லப்பட்டது. சாலை மறியல் எரிந்த நிலையில் கிடைத்த உடல், மாணவி வர்ஷிதா என போலீசார் உறுதி செய்தனர். தலித் அமைப்பினர், உறவினர்கள், கிராம மக்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சித்ரதுர்காவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் காதலனான, சித்ரதுர்காவை சேர்ந்த சேத்தன் என்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவர் மூன்றாம் நிலை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர். மாணவியை எரித்து கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். வேறோரு நபருடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரை எரித்து கொன்றதாக சேத்தன் தெரிவித்து உள்ளார்.- வர்ஷிதாவின் தாய் ஜோதி திப்பேஸ்வாமி கூறியதாவது: என் மகளுக்கு ஏற்பட்ட நிலைமை, வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. என் மகளை கொலை செய்த்தது சேத்தன் தான். அவனை துாக்கிலிட வேண்டும். விடுதி ஊழியர்கள் முறையான தகவல் வழங்கவில்லை. விடுதியில் தங்கி படிக்கும் பெண் பிள்ளைகளை, தங்கள் பிள்ளைகள் போல நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ