உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிறை கைதிகளுக்கு இனிப்பு சிற்றுண்டி 2 நாள் அதிகரிப்பு

சிறை கைதிகளுக்கு இனிப்பு சிற்றுண்டி 2 நாள் அதிகரிப்பு

பெங்களூரு: ஆண்டுதோறும் இனி அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் புத்த பூர்ணிமா நாட்களில், கைதிகளுக்கு இனிப்பு தின்பண்டம் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது குடியரசு தினம், சுதந்திர தினம், யுகாதி, பசவ ஜெயந்தி, ரம்ஜான், காந்தி ஜெயந்தி உட்பட, 15 சிறப்பு நாட்களில் கைதிகளுக்கு இனிப்பு சிற்றுண்டி அளிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் அம்பேத்கர் ஜெயந்தி, பாபு ஜெகஜீவன் ராம் ஜெயந்தியை சேர்க்க வேண்டும் என, தலித் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இதன்படி ஆண்டுதோறும், ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி, மே 12ம் தேதி புத்த பூர்ணிமா நாளன்றும் கைதிகளுக்கு இனிப்பு சிற்றுண்டி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஐந்து கோடி ரூபாய் செலவாகலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை