உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தட்சிண கன்னடாவில் பரவும் பன்றி காய்ச்சல்

 தட்சிண கன்னடாவில் பரவும் பன்றி காய்ச்சல்

தட்சிண கன்னடா: பெங்களூரை தொடர்ந்து, தட்சிண கன்னடா மா வட்டத்திலும் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. நடப்பாண்டு ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, 87 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது. இது குறித்து, தட்சிண கன்னட மாவட்ட மருத்துவ அதிகாரி திம்மையா அளித்த பேட்டி: பெங்களூரை போன்று, தட்சிண கன்னடா மாவட்டத்தில், பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது. நடப்பாண்டு ஜனவரி முதல், ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, 87 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியானது. மங்களூரில் மட்டுமே, 60 பேருக்கு நோய் உள்ளது. குளிர் காலம் வருவதால், நோய் பாதிப்பு அதிகரிக்கும் என, அஞ்சுகிறோம். குறிப்பாக பள்ளி சிறார்களுக்கு, இந்த நோய் பரவும் பீதி எழுந்துள்ளதால், நோய் அறிகுறி உள்ள சிறார்களை, பள்ளிகளுக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வில் வைத்திருக்கும்படி, பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். தொடர்ந்து காய்ச்சல் அடிப் பது, குளிர், இருமல், தலைவலி, தொண்டை வலி, மூக்கடைப்பு, உடல் வலி, அதிகமான உடல் சோர்வு போன்றவை பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளா கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை