உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 500 ஜிகாவாட்டாக்க இலக்கு

2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி 500 ஜிகாவாட்டாக்க இலக்கு

பெங்களூரு,:''காற்றாலை மின்சாரத்தில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை, 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க, இந்தியா உறுதிபூண்டுள்ளது,'' என மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.உலக காற்று தினத்தை ஒட்டி, பெங்களூரில் நேற்று நடந்த, 'இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்' நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி துவக்கி வைத்தார்.பின், 2024 - 25ம் ஆண்டில் மாநிலத்தின் மின் கட்டமைப்பில், 1331.48 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை சேமித்ததற்காக, கர்நாடக மின் துறைக்கு, 'உலக காற்று தினம்' விருது வழங்கப்பட்டது. விருதை அமைச்சர் ஜார்ஜ் பெற்று கொண்டார்.பின், பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:காற்றாலை மின்சாரத்தில் உலகளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 2030க்குள் நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு 50 சதவீதம் அதிகரிக்கப்படும். 2070க்குள் கார்பன் வெளியேற்றத்தை பூஜியமாக குறைக்கும் இலக்கை அடைய வேண்டும். இவ்விஷயத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 2030க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை, 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க, இந்தியா உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு பேசினார்.அதிகளவில் காற்றாலை மின்சாரத்தை சேமித்ததற்காக, கர்நாடக மின் துறைக்கு 'உலக காற்று தினம்' விருதை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி