மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
05-Sep-2025
சிக்பேட்: சேலை திருடிய பெண்ணை நடுரோட்டில் வைத்து தாக்கியதுடன், கண்மூடித்தனமாக காலால் எட்டி உதைத்த ஜவுளி கடை உரிமையாளர், ஊழியர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, சிக்பேட் அவென்யூ சாலையில் 'மாயா சில்க்ஸ்' என்ற துணிக்கடை உள்ளது. கடந்த 20ம் தேதி துணிக்கடைக்கு, ஒரு பெண், தன் மகனுடன் வந்தார். கல்லா பெட்டியின் அருகே கடை உரிமையாளர், ஊழியர் யாரும் இல்லை. கடைக்குள் இருந்தனர். இதை கவனித்த பெண், மகனுடன் சேர்ந்து 50 சேலைகள் இருந்த பண்டலை திருடிக் கொண்டு தப்பினார். ஒரு சேலை பண்டல் குறைந்ததால், கடையின் உரிமையாளர் உமேத் குமார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். பெண்ணும், மகனும் சேர்ந்து சேலை பண்டலை திருடியது தெரிந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, சிக்பேட்டில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் வாட்ஸாப் குரூப்பிற்கு, உமேத் குமார் அனுப்பினார். நேற்று முன்தினம் அவென்யூ சாலையில் உள்ள, இன்னொரு கடையின் முன் பெண்ணும், அவரது மகனும் நின்றனர். அவர்களை பற்றி, உமேத் குமாருக்கு சில உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர். உமேத் குமாரும், அவரது கடையில் வேலை செய்யும் மகேந்திர சீர்வியும் அங்கு வந்தனர். பெண்ணை பிடித்து சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். வயிறு, மர்ம உறுப்பில் எட்டி உதைத்தனர். யாருமே தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கே.ஆர்.மார்க்கெட் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டனர். தன் கடையில் திருடியதாக உமேத் குமார் அளித்த புகாரை அடுத்து, பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், ஆந்திராவின் குண்டக்கல் ஹம்பம்மா, 45, என்பது தெரிந்தது. ஹம்பம்மாவை தாக்கியதாக உமேத் குமார், மகேந்திர சீர்வி நேற்று கைது செய்யப்பட்டனர்.
05-Sep-2025