உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தங்கவயல் செக்போஸ்ட் 

தங்கவயல் செக்போஸ்ட் 

மார்க்கெட்டுக்கு ஆபத்து

கோ ல்டு சிட்டியில் 50 ஆயிரம் வீடுகள், 60 ஆயிரம் வாகனங்கள் இருக்குது. இது இல்லாமல் வெளியிடத்தில் இருந்து வரும் வாகனங்கள் 5,000 இருக்கலாம். இந்த வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், ரா.பேட்டை எல்லா சாலைகளிலுமே நடைபாதைகளின் நிறுத்துமிடமாக மாறியிருக்கு. இதுக்காகவே 'புல் மார்க்கெட்' கடைகளை தகர்க்கும் வேலை விரைந்து நடக்க உள்ளதாம். இங்கு '50 சி' யில் வாகன நிறுத்துமிடம் மட்டுமின்றி, நவீன மல்டி காம்ப்ளக்ஸ் கடைகள் வரப்போகுதாம். அப்படின்னா, அடுத்து எம்.ஜி.மார்க்கெட் கடைகளுக்கும் ஆபத்து இருக்குதுன்னு முனிசி., வட்டார தகவல் கூறுகிறது.

யாருக்கு என்ன அதிகாரம்?

கோ ல்டு நகரின் முனிசி.,க்கு ஐந்து ஆண்டுகளுக்கான கவுன்சிலர்களை தேர்வு செய்ய 2019 நவம்பர் 12 ல் தேர்தல் நடந்தது. தலைவர், துணைத் தலைவர் பதவிக்காலம் தலா இரண்டரை ஆண்டுகள். முதல் கட்ட தலைவர் பதவிக்காலம் முழுசா இரண்டரை ஆண்டுகள் முடிந்துப்போனது. அடுத்தக் கட்ட இரண்டரை ஆண்டுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்தாமல் ஒன்றரை வருஷம் வீணா போனது. பிறகு தான் தலைவர், து.த., பதவிக்கு தேர்தல் நடந்தது. இதனால் தற்போதைய தலைவர், து.த., பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. எனவே இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பதவிக் காலம் தரணுமுன்னு கேட்டு நீதிமன்ற விசாரணையில் இருக்குதாம். இருக்கும் பதவிக்காலத்திலேயே தலைவர் அதிகாரத்தை அவர் தான் பயன்படுத்துறாரா அல்லது வேறு நபருக்கு விட்டுக்கொடுத்து தமாஷ் பார்க்குறாரா. முனிசி.,யின் அதிகாரம் வேடிக்கையா இருக்குது. முக்கிய பிரச்னைகளில் தலைவர், துணைத் தலைவரை காணல. எல்லா அதிகாரமும் ஸ்டாண்டிங் கமிட்டியிடம் போயிட்டதா சொல்றாங்களே. இது நிஜமாவா. அதுக்கப்புறம் எதுக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலமோ.

உஷாரய்யா... உஷாரு

வ டநாட்டுக் காரங்க மாநில முழுதும் வந்து குவிந்தவாறு இருக்காங்க. இதில் கோல்டு சிட்டியும் விதிவிலக்கல்ல. எல்லா தொழிலிலுமே அவங்களே இருக்காங்க. இவங்களுக்கு வேலை கொடுத்திருப்பவங்க மீது காக்கி காரங்க 'உஷார்' நடவடிக்கையாக இருக்கோணும். குறைந்த சம்பளத்தில் ஆள் கிடைப்பதால் ஆவணங்கள் இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொண்டு, பாதிப்பு ஏற்பட்டதும் குத்துது; குடையிதுன்னு எதுக்கு கலங்கி அல்லல் படணும். ஒரு நகை கடையில் 1.93 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த ஒரு சம்பவம் போதாதா. இதையே காரணமாக வைத்து, முறையாக விசாரிக்க வேணும். இதனை காக்கிகள் தான் கட்டாயப் படுத்த வேணும்னு நகர மக்கள் சொல்றாங்க. விசாரித்தால் தானே நல்லவர், கெட்டவர் எல்லாமே தெரியவரும்.

திட்டம்

மெத்தனம்

பே த்தமங்களாவில் இருந்து கோல்டு சிட்டிக்கு மறுபடியும் குடிநீர் கொண்டு வர 69 கோடி ரூபாய் அரசு நிதி வந்தது. 2017 ல் வேலையை துவக்கி 2019 ல் முடிப்பதாக ஒப்பந்தம் செய்தாங்க. ஆனா, குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கல. இதனால் 2022க்குள் முடிக்க அவகாசம் கொடுத்தாங்க. 2025 ம் முடியும் கட்டம் வந்தாச்சு. இந்த திட்டம் என்ன ஆனது. குடிநீருக்கான குழாய் உருளைகள் பதிக்கும் வேலை எப்போது தான் முடியுமோ. ஏற்கனவே, பதிந்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள உருளை பைப்புகள் என்னானது; யார் விழுங்கியது. இதன் பேரில் பொறுப்பானவங்க ஏன் கண்டுக்கல. யார் யாருக்கு எவ்வளவு பங்கு என ஊரே கேட்குது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை