உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 4 ஆண்டுகளில் 12 புது பாலங்கள் கட்டியது மாநகராட்சி

4 ஆண்டுகளில் 12 புது பாலங்கள் கட்டியது மாநகராட்சி

சென்னை :மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 276.75 கோடி ரூபாய் மதிப்பில், 12 புதிய பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை மாநகராட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில், 276.75 கோடி ரூபாய் மதிப்பில், கொளத்துார் - வில்லிவாக்கம் ரயில்வே சந்திப்பில் மேயர் சிட்டிபாபு பாலம்; ஸ்டீபன்சன் சாலையில் செங்கை சிவம் பாலம், யானைக்கவுனி மேம்பாலம் உள்ளிட்ட 12 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 6.92 கோடி ரூபாய் மதிப்பில் எம்.கே.பி.நகர் பாலம், வைத்தியநாதன் பாலம் ஆகிய இரண்டு பாலங்கள் புனரமைப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை