உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மனதிற்கு அமைதி தரும்  ஜர்காபந்தி வனப்பகுதி

 மனதிற்கு அமைதி தரும்  ஜர்காபந்தி வனப்பகுதி

- நமது நிருபர் - பெங்களூரு நகரில் பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்வோ ர் மன அழுத்தம், பணி சுமையை குறைக்க, வார இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்தினருடன், மனதிற்கு அமைதி தரும் இடங்களுக்கு செல்ல ஆசைப்படுவர். அவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ள, வனப்பகுதியை பற்றி பார்க்கலாம். பெங்களூரின் ஜாலஹள்ளி மேற்கு பகுதியில் ஜர் காபந்தி வனப்பகுதி அமைந்து உள்ளது. இயற்கையை விரும்புவோர், மன அமைதியை தேடுவோருக்கு, இந்த இடம் ஏற்றதாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து உள்ள, மரங்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டு உள்ள மண் பாதையில் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது புதிய அனுபவமாக இருக்கும். வனத்தின் நடுப்பகுதியில் சிறிய பாறைகள் உள்ளன. இதன் மீது அமர் ந்து சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கலாம். பறவைகளின் கீச், கீச் சத்தத்தை கேட்டபடியே நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டி செல்வது புதிய அனுபவத்தை கொடுக்கும். மரங்களுக்கு அடியில் குடும்பத்தினருடன் அமர்ந்து மனம் விட்டு பேசி பொழுது போக்கலாம். வனப்பகுதியில் இருக்கும் பலா, கடம்பா, பீச் அல்மோன்ட் உள்ளிட்ட பல வகை மரங்களை கண்டு ரசித்து, புகைப்படமும் எடுத்து கொள்ளலாம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் இருப்பது போன்று, கெடுபிடி எதுவும் இங்கு கிடையாது. திறப்பு நேரம்: காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வனப்பகுதி திறந்து இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை