உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை

பெங்களூரு: “ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு இல்லை,” என, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்க்கும் நோக்கம், அரசுக்கு உள்ளதா? ஆதிகர்நாடக கிறிஸ்துவர், ஆதிதிராவிட கிறிஸ்துவர் என, பல்வேறு ஜாதிகளை பட்டியலில் சேர்க்கும்படி, அரசை துாண்டியது யார்? இந்த ஜாதிகளை ஆய்வின்போது சேர்க்கக் கூடாது. இது கல்வி, பொருளாதார ஆய்வு என, அரசு கூறுகிறது. ஆனால் எஸ்.சி., பிரிவுகளில் உள்ள அனைத்து ஜாதிகளிலும், கிறிஸ்துவர் என்ற வார்த்தையை சேர்த்துள்ளனர். இந்த பிரிவுகள் அனைத்தையும், கிறிஸ்துவராக்குவது அரசின் எண்ணமா? அப்படி செய்வது சட்டவிரோதம். இதனால் போராட்டம் வெடிக்கும். ஆய்வின்போது பொது மக்கள், தாங்கள் எந்த ஜாதி, மதம் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தகவல் அரசு ஆவணங்களுக்கு தேவையில்லை. பல குழப்பங்களுக்கு இடையே, மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நேற்று துவக்கியுள்ளது. அரசு ஆய்வு நடத்துவது புதிதல்ல. காந்தராஜு ஆணையம் அமைத்து, ஆய்வு நடத்தியது. ஆணையம் அளித்த அறிக்கையை, அரசு ஏற்கவில்லை. அறிக்கை எங்கு போனது என்பது தெரியவில்லை. அது திருடு போயுள்ளதாம். திருடு போவற்கு அறிக்கை தங்கமா? திருடப்பட்ட அறிக்கையை கண்டுபிடிக்க, அரசால் முடியவில்லை. முதலாவது ஆய்வுக்கு, 180 கோடி ரூபாய் செலவிட்டனர். ஜெயபிரகாஷ் ஹெக்டே ஆணைய அறிக்கைக்கு, எவ்வளவு செலவானது என, தெரியவில்லை. இதைப்பற்றி அரசு வாயை திறக்கவி ல்லை. இப்போது மீண்டும் 425 கோடி ரூபாய் செலவிடுகின்றனர். இது காங்கிரஸ் கருவூலமா? அக்கட்சியினர் தங்கள் வீட்டில் இருந்து பணம் கொண்டு வந்தார்களா? மக்களின் வரிப்பணத்தை இஷ்டப்படி செலவிட, அரசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? வெறும் 15 நாட்களில், 7 கோடி மக்களை ஆய்வு செய்து முடிப்பதாக கூறுகின்றனர். இதற்கு முன்பு 65 சதவீதம் மட்டுமே ஆய்வு செய்தது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத் தும் அதிகாரம், அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி