உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரம்யாவுக்கு மிரட்டல்: மேலும் இருவர் கைது

ரம்யாவுக்கு மிரட்டல்: மேலும் இருவர் கைது

பெங்களூரு : சித்ரதுர்கா ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேருக்கு, ஜாமின் வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்தை, உச்ச நீதிமன்றம் சாடியது. இதையடுத்து, நடிகை ரம்யா, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'ரேணுகாசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்' என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்து கோபமடைந்த தர்ஷன் ரசிகர்கள், ரம்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆபாச குறுந்தகவல் அனுப்பினர். இதையடுத்து, 47 பேர் குறித்து போலீசில் ரம்யா புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், கோலாரின் ஓபண்ணா, சித்ரதுர்காவின் கங்காதர் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், பெங்களூரில் நேற்று நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் கூறுகையில், ''இன்ஸ்டாகிராமில் தகவல் அனுப்பிய 47 பேரின் மிரட்டல் மற்றும் ஆபாச தகவல்கள் குறித்து போலீசில் ரம்யா புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, ஏற்கனவே கோலார், சித்ரதுர்காவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ''மேலும் ராஜேஷ், புவன் கவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிரட்டல் விடுத்தவர்கள் விபரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ