உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆபாச படங்கள் காட்டி பிளாக் மெயில் செய்தவரை கொன்ற மூன்று பேர் கைது

ஆபாச படங்கள் காட்டி பிளாக் மெயில் செய்தவரை கொன்ற மூன்று பேர் கைது

குடகு: நண்பரின் மனைவியின் ஆபாச புகைப்படங்கள், வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்த காரணத்தால், சம்பத்தை கொன்றதாக, அவரது நண்பர், நண்பரின் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.குடகு மாவட்டம் குஷால் நகரை சேர்ந்தவர் சம்பத். ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புராவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மே 14ல் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணை நடத்திய போலீசார், சம்பத்தின் நண்பர் கிரண், அவரது மனைவி சங்கீதா, கணபதி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

தொடர்பு

போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள்:சோம்வார்பேட்டின் கக்கேஹோலில் குடும்பத்துடன் வசித்து வந்த சம்பத், சில ஆண்டுகளுக்கு முன் மனைவியிடம் இருந்து பிரிந்து, குஷால் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நேரத்தில் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதை வீடியோவாக பதிவு செய்து, அப்பெண்களை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.இதுபோன்று தன் நண்பர் கிரணின் மனைவி சங்கீதாவின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அவரின் கையில் சிக்கியது. இதை வைத்து சங்கீதாவை மிரட்டி உள்ளார்.இதனால் கோபமடைந்த தம்பதி, 2023ல் பொது இடத்தில் சம்பத்தை தாக்கினர். இவ்வழக்கு குஷால் நகர் போலீசில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சம்பத், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வந்த அவர், கிரண், சங்கீதா மீது, தன்னை கொல்ல முயற்சித்ததாக புகார் செய்தார்.

மிரட்டல்

வழக்கை வாபஸ் பெற வேண்டுமானால், 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று தம்பதியை மிரட்டினார். இது தொடர்பாக நடந்த பேச்சில், ஒருவர் மீது ஒருவர் பதிவு செய்த வழக்கை வாபஸ் பெறுவது என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.ஆனால் சம்பத்தோ, மீண்டும் சங்கீதாவின் புகைப்படத்தை வைத்து மிரட்ட துவங்கினார். இதனால் தம்பதி கோபம் அடைந்தனர். மே 9ம் தேதி வீட்டுக்கு வரும்படி சம்பத்தை அழைத்தார். தன் வாகனத்தில் சென்றால், மற்றவர்களுக்கு தெரிந்துவிடும் என்று நினைத்த சம்பத், தனது மற்றொரு நண்பர் ஜான் என்பவர் காரில் சென்றார்.வீட்டிற்குள் வந்த சம்பத்தை, கிரண், சங்கீதா, குஷால் நகரின் கணபதி ஆகியோர் சரமாரியாக தாக்கி கொன்றனர். பின், சம்பத்தின் சடலத்தை, அவர் வந்த காரிலேயே வைத்து, சக்லேஸ்புராவின் கல்லஹள்ளியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு அவர் உடலை வீசி எறிந்தனர். சிறிது துாரத்தில் காரை நிறுத்தி விட்டு, மூவரும் மற்றொரு வாகனத்தில் தப்பினர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ