உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பைக்கில் சென்ற மூவர் கார் மோதி உயிரிழப்பு

பைக்கில் சென்ற மூவர் கார் மோதி உயிரிழப்பு

துமகூரு: வேகமாக வந்த கார், நேற்று முன்தினம் பைக் மீது மோதியதில், ஆந்திராவை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். துமகூரு மாவட்டம், பாவகடா தாலுகாவின் கனிவேனஹள்ளி கிராஸ் அருகில் நேற்று முன் தினம் மாலையில், பைக்கில் மேகா, 21, சீனிவாஸ், 45, நரசிம்மமூர்த்தி, 28, ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார், பைக் மீத மோதியது. பைக்கில் சென்ற மூவரும் உயிரிழந்தனர். இவர்கள் மூவரும், ஆந்திராவின் மடகஷிரா தாலுகாவின் குடிபன்டே கிராமத்தை சேர்ந்தவர்கள். பாவகடாவில் கட்டட வேலைக்காக வந்திருந்தனர். பணி முடிந்த பின் மாலை ஒரே பைக்கில், தங்களின் கிராமத்துக்கு திரும்பும் போது, விபத்து நடந்துள்ளது. ெஹல்மெட் அணியாததால், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் கார் ஓட்டுநரும், அதில் பயணித்த மூவரும் படுகாயமடைந்தனர். சாலை பணிகளுக்காக சாலையை தோண்டி, சரியாக மூடவில்லை. இதுவும் விபத்துக்கு காரணம் என, அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். பாவகடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை