மேலும் செய்திகள்
பட்டையை கிளப்பும் ஊ.செயலர்கள் வசூல் வேட்டை
16-Dec-2025
மைசூரு: மைசூரில் இருந்து மடிகேரிக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில், பெண் ஒருவர் இரு பூனை குட்டிகளுடன் பயணித்தார். அப்போது, பூனை குட்டிகளுக்கு தலா அரை டிக்கெட் கொடுத்த நடத்துநரின் செயலுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து மடிகேரிக்கு கடந்த, 26ம் தேதி பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பயணித்தார். அப்போது தன்னுடன், வீட்டில் வளர்க்கும் இரு பூனை குட்டிகளையும் கொண்டு வைத்திருந்தார். 'சக்தி' திட்டத்தால், பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். அதேவேளையில், பெண் எடுத்து வந்திருந்த இரு பூனை குட்டிகளுக்கு தலா அரை டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறினார். அதற்கு பெண் பயணி, 'மடியில் தானே வைத்துள்ளேன்' என்றார். நடத்துனரோ, 'மடியில் இருந்தாலும், இருக்கையில் இருந்தாலும் டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும்' என்று கறாராக கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண் இரு அரை டிக்கெட் எடுத்தார். இதனை அப்பெண் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சிலர், 'இனி பூனைகளுக்கு பாஸ் வாங்க வேண்டுமா; பூனைகள் பெண்ணாக இருந்தால், அவைகளும் இலவசமாக பயணித்திருக்கும்' என்று விமர்சித்துள்ளனர்.
16-Dec-2025