உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆனேகுந்தி மலையில் புலி நடமாட்டத்தால் பீதி

 ஆனேகுந்தி மலையில் புலி நடமாட்டத்தால் பீதி

கொப்பால்: ஆனேகுந்தி பகுதியில் புலியின் கால் தடங்கள் தென்படுகின்றன. கவனமாக இருக்கும்படி சுற்றுப்புற கிராமங்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின் ஆனேகுந்தி பகுதியில் நேற்று முன்தினம் மாலை புலியின் கால் தடங்கள் காணப்பட்டன. இதை கவனித்த அப்பகுதியினர், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், கால் தடயத்தை ஆய்வு செய்த போது, அது புலியின் கால் தடம் என்பது உறுதியானது. புலியை தேடும் பணியை துவக்கினர். அதன்பின் ஆனேகுந்தி சுற்றுப்பகுதிகள், மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளுக்கு, ஜீப்பில் சென்ற வனத்துறையினர், 'புலியின் நடமாட்டம் தென்படுகிறது. யாரும் தனியாக நடமாட வேண்டும். கால்நடைகளை மேய விடுவதற்காக, மலை அருகில் செல்ல வேண்டாம். 'கிராமத்தின் சுற்றுப்பகுதியின் வனம், மலைப்பகுதிகளில் புலி நடமாடுகிறது. விவசாயிகள் தனியாக வயலுக்கு செல்ல வேண்டாம். பசு, காளை, ஆடு, எருமை போன்ற வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக கொட்டகையில் கட்டி வையுங்கள். சிறு பிள்ளைகளை வெளியே விடக்கூடாது. முடிந்த வரை வீட்டுக்குள் இருங்கள். 'வனப்பகுதியில் மக்கள் நடமாட்டத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தோட்டம் அல்லது வயலுக்கு செல்லும் போது, கூட்டமாக செல்வது கட்டாயம். புலியை பார்த்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கூறுங்கள். ஆனேகுந்திக்கு வரும் சுற்றுலா பயணியரும், கவனமாக இருக்க வேண்டும்' என மைக் மூலமாக எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி