உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு புறநகரில் புலிகள் நடமாட்டம்: மக்கள் கிலி

பெங்களூரு புறநகரில் புலிகள் நடமாட்டம்: மக்கள் கிலி

பெங்களூரு : பெங்களூரு புறநகர் பகுதிகளில், புலிகளின் கால் தடங்கள் தென்பட்டதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இப்பகுதியில் புலிகள் நடமாட்டம் தென்படுவதால், எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவிறுத்துகின்றனர்.பெங்களூரு புறநகர், ஆனேக்கல் தாலுகாவில் உள்ள பன்னரகட்டா தேசிய பூங்கா சுற்றுப்பகுதியில், புலிகளின் கால் தடங்கள் காணப்பட்டுள்ளன. புலிகள் நடமாடுவதால் பொது மக்கள் அஞ்சுகின்றனர்.பன்னரகட்டா மிருகக்காட்சி சாலையை ஒட்டி, ஒரு மாதத்துக்கு முன் ஆண் புலி தென்பட்டது. அதன்பின், ஹாரோஹள்ளி அருகில் மற்றொரு புலி தென்பட்டது. தேசிய பூங்காவில் இரண்டு அல்லது மூன்று புலிகள் உள்ளன. இவை, பன்னரகட்டா பூங்கா சுற்றுப்பகுதியின் குடியிருப்புகளில் நடமாடியதற்கான கால் தடங்கள் காணப்பட்டன. இதையறிந்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பெங்களூரு நகரை ஒட்டி, பன்னரகட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது. இதற்கு முன் இங்கு ஒரு புலி மட்டுமே காணப்பட்டது. தற்போது இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூன்று புலிகள் இருக்கலாம் என, நினைக்கிறோம்.குடியிருப்பு பகுதி அருகிலேயே, பூங்கா இருப்பதால் இது புலிகள், மனிதர்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் அபாயம் உள்ளது. மக்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. புலிகள் இருப்பதை கால் தடங்கள் உறுதிப்படுத்தியும், இவற்றை கண்டுபிடிக்கமுடியவில்லை.பன்னரகட்டா தேசிய பூங்காவில், எத்தனை புலிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு நடத்துவோம். புலிகள் எங்கிருந்து வந்தன என்பதை கண்டறிவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி