மேலும் செய்திகள்
திருநங்கைகளுக்கு கல்வி சிறப்பு முகாம்
15-Jun-2025
பெங்களூரு:''அர்த்தநாரீஸ்வரர் பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்த, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்று, கர்நாடக திருநங்கைகள் அறக்கட்டளை வலியுறுத்தி உள்ளது.'பா.ஜ., தேசிய தலைவராக அர்த்தநாரீஸ்வரரை நியமிக்கட்டும்' என்று, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கிண்டலாக கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக திருநங்கைகள் அறக்கட்டளை பொது செயலர் அருந்ததி ஹெக்டே, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:அர்த்தநாரீஸ்வரர் பற்றி எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறிய கருத்து, திருநங்கைகளை மிகவும் காயப்படுத்தி உள்ளது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டாலும், அவரது கருத்தை நாங்கள் ஒரு போதும் ஏற்க மாட்டோம். காங்கிரசை வழிநடத்த திருநங்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், ராகுலை விட திறமையாக செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்.இந்த சமூகத்தில் திருநங்கைகளை ஒதுக்கி வைப்பதால், சிலர் தவறான தொழில் செய்கின்றனர். அனைவரும் அப்படி இல்லை. நேர்மையாக உழைப்பவர்கள் கூட இருக்கின்றனர். திருநங்கை சமூகத்திற்கு காங்கிரசின் பங்களிப்பு என்ன.பா.ஜ., ஆட்சியில் இருந்த போது எங்கள் சமூகத்தை சேர்ந்த மஞ்சம்மா ஜோகதிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. அவரை ஜனபத அகாடமி தலைவராக நியமித்து, நிர்வாகம் செய்ய பா.ஜ., அதிகாரம் வழங்கியது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா திருநங்கை சமூகத்திற்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார்.பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஹரிபிரசாத், ஒடுக்கப்பட்டவர்கள் குரலாக இருக்க வேண்டும். அவரது வாயில் இருந்து இந்த கருத்து வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அர்த்தநாரீஸ்வரர் கொள்கையில் தான் இந்த சமூகம் இயங்குகிறது.காங்கிரஸ் கட்சியில் லட்சுமி ஹெப்பால்கர், உமாஸ்ரீ, ஜெயமாலா என நன்றாக உழைக்கும் பெண்கள் உள்ளனர். அவர்களை ஏன் முதல்வர் ஆக்கவில்லை. எங்கள் சமூகத்தை வைத்து, ஹரிபிரசாத் அரசியல் செய்வது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
15-Jun-2025