உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் கட்டணம் உயர்த்துவது கட்டாயம் போக்குவரத்து அமைச்சர் திட்டவட்டம்

பஸ் கட்டணம் உயர்த்துவது கட்டாயம் போக்குவரத்து அமைச்சர் திட்டவட்டம்

பெங்களூரு: பால் விலையை தொடர்ந்து, போக்குவரத்துக்கழக பஸ்களின் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்த, அரசு ஆலோசிக்கிறது. வரும் அமைச்சரவை கூட்டத்தில், இதை பற்றி முடிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் பைரதி சுரேஷ் நேற்று கூறியதாவது: மாநிலத்தின் நான்கு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. நிர்வகிப்பு செலவும் அதிகரிக்கிறது. இது குறித்து, ஆய்வு செய்து எந்த அளவுக்கு, டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அதுல் திவாரி என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி இன்னும் சில நாட்களில், மாநில அரசிடம் அறிக்கை அளிக்கும். இதன் அடிப்படையில் வரும் அமைச்சரவை கூட்டத்தில், ஆலோசனை நடத்தி, பஸ் பயண கட்டணத்தை உயர்த்துவது பற்றி, முடிவு செய்யப்படும். ஐந்து முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. லிட்டர் டீசலின் விலை 15 முதல் 16 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டமடைகின்றன. நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது கட்டாயம். கடந்த, 2025ல் பஸ் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பின் அவ்வப்போது டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும், நாங்கள் பஸ் பயண கட்டணத்தை அதிகரிக்கவில்லை. இம்முறை கட்டணம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை