மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது; 1.5 கிலோ பறிமுதல்
11-Jun-2025
சூர்யாநகர்: கஞ்சா விற்றவர்களை விசாரணைக்காக ஓசூருக்கு அழைத்து சென்ற போது, நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில், பணியில் இருந்த எஸ்.ஐ., உயிரிழந்தார்.பெங்களூரு தலகட்டபுரா போலீசார், கஞ்சா விற்ற வழக்கில் கடந்த 23ம் தேதி, இருவரை கைது செய்தனர். தமிழகத்தின் ஓசூரில் இருந்து கஞ்சா வாங்கியதாக கூறினர்.இருவரையும் விசாரணைக்காக ஓசூருக்கு, தலகட்டபுரா போலீஸ் நிலைய எஸ்.ஐ., மெஹபூப் குட்டஹள்ளி, 40, கடந்த 24ம் தேதி இரவு தனியார் காரில் அழைத்து சென்றார். காரை டிரைவர் ஓட்டினார்.அத்திப்பள்ளி அருகே சூர்யாநகர் பகுதியில் சென்ற போது, கார் டயர் பஞ்சர் ஆனது. இதனால் காரில் இருந்து இறங்கி, மெஹபூப் குட்டஹள்ளி மொபைல் போனில் பேசி கொண்டு இருந்தார். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி, சாலையில் நின்ற மெஹபூப் குட்டஹள்ளி, கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அருகில் நின்றிருந்த எஸ்.ஐ., துாக்கி வீசப்பட்டார்.லாரி மோதியதில் கார் இரண்டு பல்டி அடித்தது. காருக்குள் இருந்த கஞ்சா விற்றவர்கள், அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். காரை ஓட்டிய டிரைவர், எஸ்.ஐ., படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், எஸ்.ஐ., - டிரைவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐ.சி.யு.,வில் வைத்து எஸ்.ஐ.,க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்து விட்டார். டிரைவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சூர்யாநகர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி, அதன் டிரைவர், தப்பி ஓடிய கஞ்சா விற்பனையாளர்கள் இருவரை தேடிவருகின்றனர். கார் மீது லாரி மோதியது, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் நேற்று வெளியாகி பதைபதைக்க வைத்து உள்ளது.
11-Jun-2025