உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மர்ம நபர்கள் தீ வைப்பு 2 கார்கள் எரிந்து நாசம்

 மர்ம நபர்கள் தீ வைப்பு 2 கார்கள் எரிந்து நாசம்

மைசூரு: மைசூரு நஞ்சன்கூடில் மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததில், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் நாசமாகின. மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் ஸ்ரீராம்பூர் லே - அவுட்டில் சலவாதி மகாசபை மாவட்ட தலைவர் அபிநாக் பூஷண், ஐந்தாவது கிராசில் உள்ள சந்தோஷ் ஆகியோரின் இரு கார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர். கார் எரிவதை கண்ட அங்கிருந்தவர்கள், உடனடியாக தண்ணீர் ஊற்றி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீ விபத்தில் இரு கார்களும் எரிந்து நாசமாகின. இது தொடர்பாக நஞ்சன்கூடு நகர போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: இச்சம்பவம் இப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இங்கு எப்படி வாழ்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. 10 முதல் 15 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கஞ்சா போதையில் இத்தகைய செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். நகரில் கொலை, பணம் பறித்தல், திருட்டு போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சட்டம் - ஒழுங்கு முற்றி லும் சீர்குலைந்துள்ளது. நஞ்சன்கூடில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை தடுக்க வேண்டிய போலீசார் மவுனமாக உள்ளனர். பீட் போலீஸ் இல்லாததாலேயே, இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. நாங்கள் பாதுகாப்புடன் வாழ, தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். மர்ம நபர்களை கைது செய்ய தவறினால், போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை