மேலும் செய்திகள்
சிவகாசி வெடி விபத்து பலி 5 ஆக உயர்வு
28-Jul-2026
பல்லாரி: லாரி மோதியதில் இருவர் இறந்தனர். பல்லாரியின் சண்டூர் தாலுகா, வெங்கடகிரி கிராமத்தில் உள்ள, கனிம சுரங்கத்தில் இருந்து கனிம பாரத்துடன், லாரி நேற்று மதியம் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி, சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், துாக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சண்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஹொஸ்பேட்டின் குமார், 34, மஞ்சுநாத், 38, என்பது தெரிந்தது. விபத்தில் காயம் அடைந்த டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
28-Jul-2026